Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் வேட்டையன் படத்தோடு மோதுகிறதா விஜய்யின் GOAT?

vinoth
புதன், 14 பிப்ரவரி 2024 (07:29 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்த படம் முதலில் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது தீபாவளிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படமும் தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் ரஜினி விஜய் படங்கள் கிளாஷுக்கு ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments