Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாலிவுட்டில் ஏ ஆர் முருகதாஸ்… சல்மான் கானோடு பிரம்மாண்ட கூட்டணி!

vinoth
புதன், 14 பிப்ரவரி 2024 (07:28 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்த பின்னர் முருகதாஸ் அடுத்து சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை உருவாக்க உள்ளார்.

இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிடே என்ற பாலிவுட் படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து முருகதாஸ் இயக்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது சல்மான் கானோடு இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments