Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு!

விஜய் பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு!
, புதன், 12 மே 2021 (16:04 IST)
விஜய் பட நடிகர் ஒருவர் கொரொனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

இந்தக் கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பட நடிகர் ஒருவர் கொரொனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டில் வேதம் என்ற படத்தில் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாறன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கேரகடரில் நடித்து அசத்தினார்.

அதன்பிறகு யாஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் படத்திலும் எல்லோருடைய கவனத்தையும் பெற்றார். பல மேடைகளில் கானா பாடகராகவும் வலம் வந்த அவர் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அவ்ர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!