Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் திலகத்தின் மறுஉருவில் வருக…விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் !

Advertiesment
மக்கள் திலகத்தின் மறுஉருவில் வருக…விஜய்யை  அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் !
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (22:48 IST)
தமிழகத்தில் அரசியல் நிலவரம் நாளுக்கு  நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் ஒருபுறம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒருபுறமிருக்க, ரஜினியின் ஆன்மீகம்  அரசியல் விஜய்யின் மக்கள் இயக்கம் என்று அவரவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நடிகர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டுமென அழைப்பு விடுக்க, கமல்ஹாசன் தேர்தல் களம் கண்டுள்ளார்,. சீமானும் போராடி  வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை ஒட்டி அவரையும் அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொரொனா மறந்தாச்சு,  இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என கேள்வி எழுப்பியும்,  தளபதியாரின் மாஸ்டரின் வகுப்பிற்கு காத்திருக்கிறோம் என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதேபோல் மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக ஆளப்போறான் தமிழக் தளபதி 2020 என்று தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி எனது குரு.....ஆன்மீக அரசியல்....ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அரசியல் அறிக்கை...