Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாந்தனு : குற்றமுள்ள நெஞ்சு....? விஜய் ரசிகன் செய்யுற காரியமா இது...?

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (18:44 IST)
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன்  “இல்லை”  என்று கூறிய சாந்தனு தற்போது தன்  ட்விட்டரில்  " குற்றமுள்ள நெஞ்சு ....? " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
விஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகளை தமிழக அரசு நீக்கியுள்ளனர், கோமவளவல்லி என்ற பெயரில் கோமள என  மியூட் செய்யப்பட்டுள்ளது. "கொசு உற்பத்திக்கு பொதுப்பணித்துறை காரணம்" என்று வரும் காட்சியில் "பொதுப்பணித்துறை" என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது இந்த நீக்கப்பட்ட காட்சிகள் தான், அதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
இந்த நிலையில் தற்பொழுது விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்யராஜ் குற்றமுள்ள நெஞ்சு ..... ? என்று ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட்டில் அவர் யாரை பற்றி சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. 
 
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏனென்றால் திருட்டு கதை விவகாரத்தில் சர்கார் சிக்கியதற்கு முழு காரணமே பாக்யராஜ் தான், பிறகு அந்த பிரச்சனையில் இருந்து பெருமூச்சு விட்டு மீண்டு வந்த சர்கார், பல சர்ச்சைகளுக்கு இடையில் வெளியாகி நல்ல வசூலை படைத்தது.
 
சர்கார் படம் அதிமுகவினரின் அழுத்ததால்  சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சர்கார் தீயில் ஊரே எரிந்து கொண்டிருக்கும் வேளையில் அதை கொளுத்தி போட்ட இயக்குனர் பாக்யராஜ் இதைபபற்றி ஒரு வார்த்தையும் சொல்லாதது ரசிகர்களுக்கு ஒரு விதமான வருத்தத்தை அளித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது பாக்யராஜின்  மகனான சாந்தனு " குற்றமுள்ள நெஞ்சு ...?" என்று மறைமுகமான  ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும்போது இது விஜய்க்கு தானோ ..? என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. இதைக்கண்டு ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 
 
இருந்தாலும், இவர் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால் தளபதியை தாக்க வாய்ப்பில்லை என்கிறது மற்றொரு  கூட்டம். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments