Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதியை பார்த்து பயந்துபோன சர்கார்(க்கள்) - வரலக்ஷ்மி

Advertiesment
தளபதியை பார்த்து பயந்துபோன சர்கார்(க்கள்) - வரலக்ஷ்மி
, வெள்ளி, 9 நவம்பர் 2018 (16:21 IST)
ஒரு படத்தை பார்த்து இவ்வளவு  பயப்படும் அளவுக்கா இந்த அரசு வீக்காக இருக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். 
 
விஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகளை தமிழக அரசு நீக்கச்செய்ததால், விஜய்யின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
இந்நிலையில் தற்பொழுது வரலட்சுமி சரத்குமார் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  
 
ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்காக உள்ளது? எதை நீங்கள் செய்யக் கூடாதோ அதையே திரும்ப திரும்ப  செய்து உங்களின் நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். இது கற்பனை சுதந்திரம் என்று வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார். 
 
வரலக்ஷ்மியின் இந்த ட்விட்டருக்கு ரீட்விட் செய்த நெட்டின்சஸ் " சிஸ்டர் உங்க ரோல் தான் இங்க பெரிய பிரச்னையே" என்றும் கலாய்த்து தள்ளியுள்ளனர். 
 
படத்தில் வரலட்சுமியின் கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் தற்போது அதை  மியூட் செய்ய வைத்துள்ளனர். மேலும்  அரசியல் கட்சியினர் அளித்த இலவச பொருட்களை தீயில் போடும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு காட்சியிடப்பட்டுள்ளது.  
 
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் " நீங்கள் காட்சிகளை நீக்கினால் என்ன நாங்கள் எல்லோருக்கும் இதை ஷேர் செய்வோம்" என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர்.
 
மேலும், விஜய் ரசிகர்கள் பலர் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆஃப்பில் ஒரே மாதிரியான டிபி வைத்து சர்காருக்கு ஆதரவு என்று தெரிவித்து வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்காரில் டிவியை எரித்தால் திருப்தியா? நீதிபதி சாட்டையடி கேள்வி