Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்கார்: நாட்ல ஜனநாயகம் எப்பவோ அழிஞ்சுபோச்சு - பா.ரஞ்சித்

சர்கார்: நாட்ல ஜனநாயகம் எப்பவோ அழிஞ்சுபோச்சு - பா.ரஞ்சித்
, வெள்ளி, 9 நவம்பர் 2018 (17:13 IST)
சர்கார் படத்தின் விவகாரம் தமிழகத்தில் பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. சர்கார் சர்ச்சையை குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இந்த நாட்டில் ஜனநாயகம் எப்பவோ அழிந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 
 
சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காட்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிகிறார். 
 
இதனைப்பார்த்த பல விஜய் ரசிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையில்லா பொருட்களை தூக்கிப் போடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
 
எனவே படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.கவினர் போரட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. 
 
இதனையடுத்து , இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். அதில், “சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசின் அதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் எப்பவோ ஜனநாயகம் அழிந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுதணிக்கை செய்ய யாருக்கும் அதிகாரமில்லை : சீனுராமசாமி