Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காசு குடுத்து விளம்பரம் தேடுகிறாரா அஜித் குமார்!?? – கிளப்பிவிட்ட விஜய் ரசிகர்கள்

Advertiesment
காசு குடுத்து விளம்பரம் தேடுகிறாரா அஜித் குமார்!?? – கிளப்பிவிட்ட விஜய் ரசிகர்கள்
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:56 IST)
நடிகர் அஜித் குமார் பணம் கொடுத்து விளம்பரம் தேடுவதாக ட்விட்டரில் பலர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் மோதல் போக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று. சமீபத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர். அதே நேரம் அஜித் ரசிகர்கள் அவரது பெயர் அறிவிக்கப்படாத அடுத்தப் படத்திற்கான ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை ட்விட்டரில் போட்டு அஜித்தை ட்ரெண்ட் செய்ய இரு ரசிகர்களுக்கும் இடையே ஹேஷ்டேக் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று பிகில் படத்தின் அப்டேட் போஸ்டர் ஒன்ரு வெளியானது. நேற்று காலை Opinion Poll ஒன்று தொடங்கியது தனியார் தொலைக்காட்சி நிறுவனம். அதில் இந்த வார முதல்நாளை யாரோடு துவங்க போகிறீர்கள் என்று கேட்டு விஜய், அஜித் என்ற இரண்டு ஆப்சன்களை கொடுத்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து அஜித்துக்கு அதிக வாக்குகள் கிடைத்து விஜய்க்கு முன்னாள் சென்றது அவரது வாக்குகள். உடனே அஜித் ரசிகர்கள் தலதான் எப்பவுமே கெத்து என்று ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு விஜய் ரசிகர்களை கடுபேற்றினர்.

விஜய் ரசிகர்கள் சில நிமிடங்களில் பல ஆயிரம் ஓட்டுகள் விழ வாய்ப்பே இல்லை. அஜித் ரசிகர்கள் அதிக லைக் விழ வைக்கும் மென்பொருட்களில் பணம் செலுத்தி இதுபோன்ற போலியான வெற்றிகளை தேடிக்கொள்கின்றனர் என ட்விட்டரில் கூற ஆரம்பித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் புதிய அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வரும் வேளையில் அஜித் ரசிகர்கள் அதை கலாய்த்து அடுத்த மோதலை தொடங்கி வைத்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.300 கோடி பட்ஜெட் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் சூப்பர்குட் பிலிம்ஸ்!