Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைலியில் கத்தியுடன் மாஸான தளபதி - "பிகில்" புதிய போஸ்டர் !

Advertiesment
கைலியில் கத்தியுடன் மாஸான தளபதி -
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:06 IST)
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தில் இடப்பெறும் "சிங்கப்பெண்ணே" மற்றும் வெறித்தனம் என்ற இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற தீபாவளி திருநாளில் ரிலீசாகவிருந்த பிகில் படம் முன்னதாவே ரிலீசாகவுள்ளதாக கூறி வதந்திகள் இணையத்தில் பரவியது. இதற்கு படக்குழுவினர் தரப்பில் முற்றுப்புள்ளி வைத்து சரியான நாளில் படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என கூறியதோடு புதிய போஸ்டர் ஒன்று இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். 
 
இந்நிலையில் சற்றுமுன் பிகில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் அர்ச்சனா கலப்பாத்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் விஜய் கைலி அணிந்துகொண்டு கையில் ஒரு கத்தியுடன் மிகுந்த கோபத்துடன் தோற்றமளிக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்க்கில் கவினை காப்பாற்றும் பிக்பாஸ் ? - வீடியோ!