Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

vinoth
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (08:16 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பார்த்து சலித்துப்போன கதையை எடுத்து வைத்துள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

சலார், கே ஹி எஃப் 2 மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களின் சாயலில் உள்ளதாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 67 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆன்லைன் டிக்கெட் விற்பனையை அரசே கையாள வேண்டும்.. தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை..!

திரைப்பட துறைக்கு வருகிறார் இன்பநிதி.. முதல் படமே தனுஷ் படம் தான்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. பிரபல சீரியல் நடிகை

மிஷ்கின் ஜோடியாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு..!

இதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுனா நான் மனுஷனே கிடையாது! - நாய் பிரியர்களை கிழித்த நடிகர் அருண்!

அடுத்த கட்டுரையில்
Show comments