Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI மூலமாக ராஞ்சனா க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனரைத் தொடர்ந்து தனுஷும் அதிருப்தி!

vinoth
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (08:02 IST)
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.  2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இந்த படம் தனுஷுக்கு இந்தியில் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, சோனம் கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது. தற்போது இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரி ரிலீஸ செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலமாக க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கு இயக்குனர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது தனுஷும் அதை விமர்சித்துள்ளார். இது சம்மந்தமான தன்னுடைய பதிவில் “ AI மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த படம் என்னைத் தொந்தரவு செய்துவிட்டது. நான் ஒத்துக்கொண்டு நடித்த ராஞ்சனா இது இல்லை. இது சம்மந்தமாக நான் தெரிவித்த கருத்தை மீறி இதை செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும் மாற்றங்கள் சினிமாவை அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இது சம்மந்தமான வழிகாட்டுதல்கள் தேவை” என அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments