தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் நானியை வைத்து ஜெர்சி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பல தாமதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆனால் பாடல்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்துள்ளாராம். பின்னணி இசைப் பணிகளை தன்னுடைய குழுவில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகும் கூலி படத்தின் பின்னணி இசைப் பணிகளில் அனிருத் பிஸியாக இருக்கிறாராம்.