Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 நிமிட பிளாஷ்பேக் காட்சிக்கு இத்தனை கோடி செலவா?.. தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

10 நிமிட பிளாஷ்பேக் காட்சிக்கு இத்தனை கோடி செலவா?.. தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 11 டிசம்பர் 2023 (14:56 IST)
லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் விஜய் இளமையாக தோன்றும் காட்சிகளுக்காக டி ஏஜிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. 10 நிமிடம் மட்டுமே இடம்பெறும் இந்த காட்சிகளுக்காக மொத்தம் 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியாயமா த்ரிஷாதானே உங்க மேல வழக்கு தொடரணும்.. மன்சூர் அலிகானைக் கண்டித்த உயர் நீதிமன்றம்!