Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால் படத்திற்கு பாராட்டு தெரிவித்த விஜய்

விஷால் படத்திற்கு பாராட்டு தெரிவித்த விஜய்
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:14 IST)
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான யாஷின் “கே.ஜி.எஃப்” திரைப்படம் பெரும் போட்டியில் வெளியானாலும் உலகமெங்கும் அனைவரின் பாராட்டையும் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. கன்னடத்தில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் கேஜிஎப் படத்தை பார்க்க விரும்பியதால் அவருக்காக சென்னையில் பிரத்யேகமாக இப்படத்தை படக்குழுவினர் திரையிட்டனர். படத்தை பார்த்த நடிகர் விஜய், “கே.ஜி.எஃப்” படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக பாராட்டினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து கே.ஜி.எஃப் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர்.

கன்னட படம் ஒன்று ரூ.200 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

URI படத்தை திருட்டு டவுன்லோடு செய்தவங்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு