Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

URI படத்தை திருட்டு டவுன்லோடு செய்தவங்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு

URI படத்தை திருட்டு டவுன்லோடு செய்தவங்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு
, வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:09 IST)
2016ல் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய Surgical Strike-ஐ மையப்படுத்தி URI: The Surgical Strike' என்ற இந்தி படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் நடித்திருந்தனர். இப்படத்தை திருட்டுதனமாக இணையத்திலிருந்து பலர் டோரன்ட் பதிவிறக்கினார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
இது பற்றி படத்தை திருட்டு தனமாக  பதிவிறக்கிய ஒருவர் பதிவிட்டிருந்தார். 3.8 GB-க்கு படத்தைத் திருட்டுத்தனமாக பதிவிறக்கிய படத்தை போட்டு பார்த்த போது, படம் தொடங்குவதுபோல தொடங்கியுள்ளது. படத்தின் நட்சத்திரங்கள் விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் இப்படி திருட்டுத்தனமாக பதிவிறக்கியவர்களை கலாய்த்து அறிவுரை கூறியுள்ளனர்.  இப்படி இவர்கள் செய்த prank 2 நிமிடம் ஓட, மீதி 2 மணிநேரத்திற்கு மேல் இப்படத்தின் டிரெய்லர்தான் மீண்டும் மீண்டும் ஓடியுள்ளது.
 
URI படக் குழுவினர் , உண்மையில் திருட்டு பிரின்ட்டுகள் எந்த தரத்தில் இருக்குமோ, அதே தரத்தில் இந்த ப்ராங் (prank) வீடியோவையும் எடுத்துள்ளனர்.  இந்த வீடியோ முயற்சியை இந்தி திரை உலகில் பலரும் பாராட்டி உள்ளார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடையை விமர்சித்து கேவலமான பதிவு: ரகுல்பிரீத் சிங் பதிலடி