நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் பட நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் இதுவரை பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்க உள்ளனர். ஆனால் முன்னதாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபுதேவாதான் நடிக்க இருந்தார். அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி உள்ளே வந்ததும், பிரபுதேவா நீக்கப்பட்டார். ஆனால் அதை அவரிடம் முறையாக கூட படக்குழு தெரிவிக்கவில்லையாம். இதனால் அவர் மிகுந்த அதிர்சிச்யும் அதிருப்தியும் அடைந்துள்ளாராம்.
இந்நிலையில் தற்போது விக்ரம் படம் குறித்து புதிய தகவல் வெளியாகிறது. அதில்,கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. திரில்லர் கதைபாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருச் இசையமைக்கவுள்ளார். இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்றாகும்.