Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

முட்டாள்தனமாக வேலை...நடிகை ராதிகா சரத்குமார் கோபம் !

Advertiesment
முட்டாள்தனமாக வேலை...நடிகை ராதிகா  சரத்குமார் கோபம் !
, சனி, 5 ஜூன் 2021 (18:38 IST)
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவரது 65 அது பிறந்தநாள் அன்று அவரது பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டது. இதற்கு சுஹாஷினி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ராதிகா மூளை இல்லாதவர்களின் வேலை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்களிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான இதயக் கோவில், அக்னிநட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, குரு, அலைபாயுதே, தில்ஷே, ராவணன், காற்று வெளியிடை, உள்ளிட்ட பல படங்களை இயக்கி இந்திய சினிமாவை உலக சினிமா ரீதியாக உயர்த்தியவர் அவர்.

அவர் தற்போது, பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். தற்போது கொரொனா தொற்றால் இப்படம் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஷீட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பெயரில் போலி டுவிட்டர் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது மனைவியும் நடிகையுமான சுஹாஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒருவர் மணிரத்னம்
பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கியுள்ளார். இதைப் பகிருங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவர்களையும், நடிகர், நடிகைகளை கிண்டல் அடிப்பது குறித்தும், கேலி செய்வது குறித்தும் நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமாக டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், சமூக வலைதளங்களில் பதிவிடும் முட்டாள்தனமான பதிவுகளைப் பார்க்கிறேன். இதற்காக என் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க விரும்பவில்லை எனக் தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி ஹேஸ்டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பொண்டாட்டிய லவ் பண்றேன்னு சொன்னியாமே? நடிகரிடம் எகிறிய சூர்யா - யார் தெரியுமா?