Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் அரசியலுக்கு வர ஜோதிடம்தான் காரணமா?

Advertiesment
விஜய் அரசியலுக்கு வர ஜோதிடம்தான் காரணமா?

vinoth

, புதன், 7 பிப்ரவரி 2024 (07:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவர் கட்சி சம்மந்தமாக பல்வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் ஜாதகத்தைக் கணித்த ஒரு ஜோதிடர் ஒருவர் விஜய்க்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியதன் பின்னர்தான் விஜய் துணிந்து அரசியலில் இறங்கியுள்ளார் என்று ஒரு தகவல் ஓடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் படத்தில் ரஜினிக்கு இந்த லுக்தான்…விண்டேஜ் ரஜினி தரிசனம் கன்ஃபார்ம்!