தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விதான் இப்போது விஜய் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி. இதில் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபடும் நிலையில் இப்போது இயக்குனர் வெற்றிமாறன்தான் இயக்கப் போகிறார் என இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.