Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கொலை ஒரு உலகத்தரமான படம்…” இயக்குனரைப் பாராட்டிய விஜய் ஆண்டனி

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படமும் ஒன்று. இவர் இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லபடுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் படக்குழுவினரோடு இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி “எப்பொழுதும் ஒரு படத்தின் முழு பொறுப்பும் இயக்குனர் உடையதுதான். அவருக்கு துணையாக இருப்பவர்கள்தான் என்னைப் போன்ற டெக்னீசியன்கள். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சினிமாவுக்குக் கிடைத்திருக்கிற தரமான இயக்குனர். அது ‘கொலை’ படத்தைப் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இந்த திரைப்படம் ஒரு உலகத் தரமான திரைப்படம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments