Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’…. இயக்குனர் CS அமுதன் வெளியிட்ட முக்கிய தகவல்!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’…. இயக்குனர் CS அமுதன் வெளியிட்ட முக்கிய தகவல்!
, புதன், 29 ஜூன் 2022 (11:00 IST)
விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தை தமிழ் படம் புகழ் சி எஸ் அமுதன் இயக்கி வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில்  CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படம் சில மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில்,  தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில்  துவங்கவுள்ளது. சி எஸ் அமுதன் இயக்கும் இந்த திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படங்களை போல நகைச்சுவை அம்சம் கொண்டதாக இல்லாமல், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பாடல் படப்பிடிப்பை அடுத்து மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பில்கேட்ஸை சந்தித்த நடிகர் மகேஷ் பாபு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!