Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“அவர் வெறும் காமெடிப் பட இயக்குனர் கிடையாது…”- சி எஸ் அமுதன் குறித்து விஜய் ஆண்டனி!

“அவர் வெறும் காமெடிப் பட இயக்குனர் கிடையாது…”- சி எஸ் அமுதன் குறித்து விஜய் ஆண்டனி!
, சனி, 30 செப்டம்பர் 2023 (08:11 IST)
தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி  ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து இந்த படத்தின் ப்ரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி “சி எஸ் அமுதன் என் நெடுங்கால நண்பர். அவர் அப்பாதான் எனக்கு இசை சொல்லிக் கொடுத்தார். ஆனால் நான் இசைக் கற்றுக்கொள்ளாமலேயே சினிமாவுக்கு வந்துவிட்டதாக அவருக்கு என் மேல் கோபம்.

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே படம் பண்ண வேண்டும் என பேசிக்கொண்டோம். அது இப்போது கைகூடி உள்ளது. அவரைக் காமெடி பட இயக்குனராகதான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அதைத் தாண்டிய ஒரு பரிமாணத்தை இதில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேன் இந்தியா படமாக உருவாகிறதா ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம்?