Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சைக்காரன் ஒரு ”க்ரிஞ்ச்” படம்தான்!? – ஓப்பனாக சொன்ன விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் ஒரு ”க்ரிஞ்ச்” படம்தான்!? – ஓப்பனாக சொன்ன விஜய் ஆண்டனி!
, திங்கள், 22 மே 2023 (16:40 IST)
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் ‘பிச்சைக்காரன் 2’ படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் உள்ளார்.

படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், வெற்றிகரமாக வசூல் செய்தும் வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி “சமீப காலமாக க்ரிஞ்ச் என்று சொல்லி பல விஷயங்களை நாம் மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காகதான் பலரும் ஏங்குகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலரும் க்ரிஞ்ச் என கூறிவிடுகின்றனர்.

யாருமே சொல்லாத, பேச தயங்கிய பல கிரிஞ்ச் விஷயங்களை பேசி இருந்ததால்தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வதந்தி உண்மையானது. நடிகர் சரத்பாபு காலமானார்..!