Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமுதன் சினிமாட்டிக் யூனிவர்ஸா?.. வித்தியாசமான ரத்தம் படத்தின் ப்ரமோஷன்!

அமுதன் சினிமாட்டிக் யூனிவர்ஸா?.. வித்தியாசமான ரத்தம் படத்தின் ப்ரமோஷன்!
, வியாழன், 5 அக்டோபர் 2023 (14:10 IST)
தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் சி எஸ் அமுதன். இப்போது அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி  ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து இந்த படத்துக்காக வித்தியாசமான ப்ரோமோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. முன்பு தயாரிப்பாளர் தனஞ்செயனை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டு அது வைரல் ஆன நிலையில் இப்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சி எஸ் அமுதன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் “விஜய் ஆண்டனி மழையில் நனைந்தபடி நடந்து சென்று கொண்டிருக்க, எதிரே தமிழப்படம் 2 கெட்டப்பில் வருகிறார் சதீஷ், அவரிடம் விஜய் ஆண்டனி நீங்க எங்க இங்க எனக் கேட்க “அமுதன் சினிமாட்டிக் யூனிவர்ஸ்க்காக வர சொல்லி இருக்காங்க ப்ரோ” எனக் கூறி செல்கிறார். சீரியஸான படமாக எடுக்கப்பட்டுள்ள ரத்தம் படத்துக்கு இதுபோல நகைச்சுவையான ப்ரோமோக்கள் வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களின் கணிப்பு உண்மையானது… ஆதி குணசேகரனாக பிரபல நடிகர்!