Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் ரிலீஸ் தேதி இதுதான்!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் ரிலீஸ் தேதி இதுதான்!
, சனி, 21 அக்டோபர் 2023 (07:51 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியாவில் இதுவரை யாரும் செல்லாத இடங்களான வட இந்தியாவின் டையு டாமன் ஆகிய பகுதிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் இப்போது முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்னகுமார் வேண்டாம்… லோகேஷிடம் கோரிக்கை வைக்கும் லாரன்ஸ்!