Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

J.Durai

, செவ்வாய், 21 மே 2024 (14:29 IST)
விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கோலி சோடா2' போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன்' (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார். 
 
விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், 'திருமலை' படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘
 
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 
 
'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம், சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் கதை. படம் அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
 
'கோடியில் ஒருவன்’, 'கொலை', 'ரத்தம்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
 
கருப்பொருள், உருவாக்கம் மற்றும் நடிகர்களின் திறமையாம நடிப்பிற்காக பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் இந்தத் திரைப்படம் ஈர்க்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இத்திரைப்படம் 'கவிதைத் தனத்துடன் ஆக்‌ஷன் என்டர்டெய்னர்' என்ற புதிய வகையை (Genre) முன்வைக்கிறது. ஏனெனில், இது வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படமாக இருக்காது. ஆனால், சமூகம் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி நடத்துகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் பாத்திரத்தைப் பற்றிய பின்னணியில் வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாக படம் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், திரையரங்குகளில் வெளியாகும். அதற்கு முன்பாக மே 29, 2024 அன்று டீசரை வெளியிட்டு  படத்தின் புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பிற்கு ‘டூஃபான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியிடப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்