Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் - பிரபுதேவா மோதலா??

விஜய் - பிரபுதேவா மோதலா??
, செவ்வாய், 16 மே 2017 (10:52 IST)
நடிகர் இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவருகிரார். இந்த படத்தில் மூன்று வேடங்களில், மூன்று கதாநாயகிகளுடன் நடித்து வருகிறார்.


 
 
இந்த படத்திற்கு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரபுதேவா இயக்கத்தில் இரணடு படங்களில் நடித்துள்ளார். அதில் போக்கிரி படம் நல்ல வரவேற்பை பெற்றது. வில்லு படம் தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில் பிரபுதேவா- ஹன்சிகா நடித்துவரும் குலேபகாவலி படமும் விஜய் படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. 
 
ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவாவுக்கு இவரா அப்பா?