Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரொமான்ஸ் செய்யும்போது கூட முறைப்பா இருக்காரே: பீஸ்ட் புதிய புரமோ வீடியோ!

vijay pooja
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (12:33 IST)
ரொமான்ஸ் செய்யும்போது கூட முறைப்பா இருக்காரே: பீஸ்ட் புதிய புரமோ வீடியோ!
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன 
 
இந்த நிலையில் சற்று முன் சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பீஸ்ட் புரமோ வீடியோவில் பூஜா ஹெக்டேவுடன் விஜய் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளன
 
ஆனால் இந்த ரொமான்ஸ் காட்சியில் கூட அவர் முறைத்து கொண்டு இருப்பது போன்று உள்ளதால் அவர் படம் முழுவதும் சீரியஸாக தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது
 
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,  யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடைக்கு மேல் தடை.. சிக்கலில் பீஸ்ட்! – ரசிகர்கள் அதிர்ச்சி!