Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதி 66-ல் நடந்த மாற்றம்… வெளியேறிய முக்கியக் கலைஞர்!

தளபதி 66-ல் நடந்த மாற்றம்… வெளியேறிய முக்கியக் கலைஞர்!
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:58 IST)
நடிகர் விஜய் நடிப்பில் நடிக்கும் தளபதி 66 படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் அந்த பூஜை நடைபெற்று உள்ளது. தளபதி 66 படத்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 66 படக்குழுவில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்துள்ளது. இந்த படத்துக்கு வசனம் எழுத முன்பு இயக்குனர் ராஜு முருகன் ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவர் விலகிவிடவே அவருக்கு பதில் பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க ராஜு முருகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. வம்சி தமிழில் இயக்கிய தோழா படத்திற்கும் ராஜு முருகன் வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் படத்தின் நள்ளிரவு காட்சிகளுக்காக ஏற்பாடு….டிக்கெட் ரேட் இவ்வளவா?