Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யிடம் கதையை சொன்ன நெல்சன் – தளபதி ரியாக்‌ஷன்!

விஜய்யிடம் கதையை சொன்ன நெல்சன் – தளபதி ரியாக்‌ஷன்!
, புதன், 2 டிசம்பர் 2020 (15:17 IST)
விஜய்க்காக கதை தயார் செய்து வரும் இயக்குனர் நெல்சன் படத்தின் ஒரு வரிக்கதையை விஜய்க்கு விவரித்துள்ளாராம்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது விஜய் 65 இயக்குனர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனரான நெல்சன்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக முழு நகைச்சுவை படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் இப்போது படத்துக்கான வேலைகளை நெல்சன் தொடங்கியுள்ள நிலையில் படத்தின் ஒரு வரிக்கதையை விஜய்க்கு சொல்ல அதில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கேட்டுள்ளாராம் விஜய். இதனால் நெல்சன் இப்போது மீண்டும் அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகதாஸை அழைத்து வாய்ப்புக் கொடுத்த பவர் ஸ்டார் – என்ன முடிவு எடுப்ப்பார்?