Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலங்கானா முதல்வர் ஆகிறார் விஜய் ஆண்டனி?

தெலங்கானா முதல்வர் ஆகிறார் விஜய் ஆண்டனி?
, வியாழன், 1 ஜூன் 2017 (15:20 IST)
தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக நடிக்க, விஜய் ஆண்டனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


 

 
ஆந்திராவில் இருந்து பிரிந்து, தனி மாநிலமாகச் செயல்பட்டு வருகிறது தெலங்கானா. அதன் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பணியாற்றுகிறார். தெலங்கானாவைத் தனி மாநிலமாக ஆக்க, பல போராட்டங்களை நடத்தியவர் சந்திரசேகர ராவ். எனவே, அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநரும், தயாரிப்பாளருமான மதுரா ஸ்ரீதர்.
 
இந்தப் படத்தின் துவக்க விழா, விரைவில் நடைபெற இருக்கிறது. சந்திரசேகர் ராவாக, ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருக்கிறார். சந்திரசேகர் ராவின் உருவ அமைப்பை பல நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், இவர்தான் பொருத்தமாக இருந்தாராம். ஹிந்தி மற்றும் தமிழில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், தமிழில் ஹீரோவாக நடிக்க விஜய் ஆண்டனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் கேமராமேனின் உயர்ந்த உள்ளம்