Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் கேமராமேனின் உயர்ந்த உள்ளம்

Advertiesment
அஜித் கேமராமேனின் உயர்ந்த உள்ளம்
, வியாழன், 1 ஜூன் 2017 (14:47 IST)
அஜித் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வரும் வெற்றி, விவசாயிகளுக்காகப் போராடி வருகிறார்.


 

 
‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ‘விவேகம்’ படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார் வெற்றி. கொங்கு மண்டல விவசாயிகளுக்குப் பரிச்சயமான பழனிச்சாமியின் மகன் இவர். வெற்றியின் அப்பா பழனிச்சாமி, விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.
 
“விவசாயிகளின் நலன் காக்க எத்தனையோ வழிகளில் பாடுபட்டார் அப்பா. அப்போது என்னால் அவருக்கு உதவ முடியவில்லை. கடந்த வருடம் அப்பா இறந்துவிட்டார். எனவே, அவருடைய பணிகளை நான் முன்னெடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெற்றி.
 
விவசாயிகளுக்காக ‘ஏர்முனை’ என்ற அமைப்பை நடத்திவரும் வெற்றி, உழவர் சந்தையை மீட்டெடுத்து உயிர்ப்பிக்க பாடுபட்டு வருகிறார். பல்கேரியாவில் ‘விவேகம்’ ஷூட்டிங் முடிந்ததும் சொந்த ஊருக்குப் போனவர், பல்லடத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு நடிகையின் அதிர்ஷ்டம் - பொறாமையில் மற்ற நடிகைகள்