Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 69 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

விஜய் 69 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

vinoth

, சனி, 14 செப்டம்பர் 2024 (09:59 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.   படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளதாம். இதற்காக பனையூர் பகுதியில் அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் ஒரு பாடல் காட்சியைதான் படமாக்க உள்ளாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்ட்ராகா என்டர்டெயின் மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு 'கடலோர கவிதை' வெளியாகிறது!