Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்ட்ராகா என்டர்டெயின் மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு 'கடலோர கவிதை' வெளியாகிறது!

Advertiesment
Ondraka Entertainment

J.Durai

, சனி, 14 செப்டம்பர் 2024 (09:47 IST)
ஒரு ஊரிலேயொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தங்களின் அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழில் 'கடலோரக் கவிதை' மற்றும் மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். 
 
ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும்.
 
இதற்கு விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவை இலை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார்.
 
அருண் பிரபா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும் மலையாளப் பதிப்பிற்கு  அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர்.
 
'கடலோரக் கவிதை'யின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘இவ்வளவு நாள் கடன் எனும் பசியில் இருந்தேன்…’- தோல்வி படங்கள் தேர்வு குறித்து பேசிய சசிகுமார்!