Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் படம் இல்லை… இது வேறமாதிரி- விஜய் 66 பட இயக்குனர் தகவல்!

அரசியல் படம் இல்லை… இது வேறமாதிரி- விஜய் 66 பட இயக்குனர் தகவல்!
, புதன், 2 மார்ச் 2022 (12:08 IST)
வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்தை பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

வம்சி வழக்கமாக குடும்ப செண்ட்டிமெண்ட் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்குவார். ஆனால் தளபதி 66 ஒரு அரசியல் களம் என்று சில தினங்களாக செய்திகள் வெளியாகின. இப்போது அதை மறுத்துள்ளார் வம்சி. சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘அரசியல் களம் அல்ல. வழக்கமான என்னுடைய படங்களைப் போலவே எமோஷனலான படம் ‘ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவுக்கு சிறப்பு பட்டம் வழங்கிய சத்யராஜ்!