Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’விஜய் 65’’ படத்தின் டூயட் பாடல் காட்சி.... முக்கிய அப்டேட்

Advertiesment
Vijay 65  Duet son

Sinoj

, சனி, 24 ஏப்ரல் 2021 (18:34 IST)
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம்  ’விஜய்65’ .

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அபர்ணா டாஸ் என்பவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

 
இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை தேர்தல் நாள் என்பதால் விஜய் சென்னையில் ஓட்டுபோட்டவுடம் விஜய்65 படக்குழுவினருடன் ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றனர். அங்கு விஜய் மற்றும் அவரது படக்குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவிவருவதால் விஜய்65 படத்தின் 30% ஷூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இப்படத்தின் மூன்றில் ஒரு பங்கு ஷூட்டிங் இங்குதான் நடத்தப்படவுள்ளது.

மேலும் தியேட்டர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் வரும் முன்னரே இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் டூயட் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டுள்ளது.  முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படத்தில் பூஜா ஜெக்டே நடித்துவருவது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இப்படம் இந்த ஆண்டில் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகுதி இல்லாதவர்களை நீக்குவேன் - நடிகர் கமல்ஹாசன்