விக்னேஷ் சிவன் – ப்ரதீப் ரங்கநாதன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (16:00 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின.

இந்நிலையில் இப்போது இந்த படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் உறுதி செய்துள்ளனர். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ப்ரதீப் விக்னேஷ் சிவனுக்கு பேரிச்சைப் பழங்களை (டேட்ஸ் –அதவாது கால்ஷீட் தேதிகள்) கொடுப்பதாகக் கூறி அதை பெற்றுக்கொண்டார் விக்னேஷ் சிவன். இதன் மூலம் இருவரும் ஒரு படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments