பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.
அதனால் இந்த ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த 2024 கிறிஸ்துமஸில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அமீர்கான் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஜியோ ஸ்டுடியோவோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.