Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளே அடையாளமின்றி அழகா மாறிப்போன வித்யுலேகா ராமன்

Advertiesment
ஆளே அடையாளமின்றி அழகா மாறிப்போன வித்யுலேகா ராமன்
, செவ்வாய், 23 ஜூன் 2020 (08:29 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைத்ததது குறித்து ஒரு பதிவிட்டுள்ளார் அதில், " நான் அதிக எடையுடன் இருந்தபோது எல்லோரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி “நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?”. பின்னோக்கிப் பார்த்தால், நானா? அல்லது என் வாழ்நாள் முழுவதும் நான் பருமனாக இருப்பேன் என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்? இன்று நான் உண்மையில் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன், என் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றினேன்.

நீங்களும் மனதை வைத்தால், எதுவும் சாத்தியம் என்பதை உணர்வேர்கள். ஆனால், ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்து சீரான உணவைப் பின்பற்ற வேண்டும். முடிவைச் செய்ய இரகசிய போஷன் அல்லது மாத்திரை எதுவும் இல்லை! வெறும் தூய்மையான கடின உழைப்பு. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல, ஆனால் முடிவைப் பார்க்கும்போது, அது வியர்வை மற்றும் கண்ணீருக்கு மதிப்புள்ளது. இப்போது நான் ( 20/06/20 )- 68.2 கிலோ எடை இருக்கிறேன் என கூறி பதிவிட்டு பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக மாறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் 60 படத்தின் முக்கிய அப்டேட் – ஒளிப்பதிவாளர் இவர்தான்!