Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை படத்தின் முக்கிய அப்டேட்டை புகைப்படத்தோடு வெளியிட்ட படக்குழு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (16:11 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை இப்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் திண்டுக்கல் அருகே படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு சூரி கலந்துகொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்தார். இந்நிலையில் தற்போது அந்த ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments