Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா விடுதலை? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (15:56 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் எதையுமே இதுவரை படக்குழு தொடங்கவில்லை. அதனால் அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments