Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விடுதலை 2 படத்துக்கு ஷூட்டிங்கா?... இயக்குனர் வெற்றிமாறனின் முடிவு!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (11:46 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இன்னும் ஒரு வார காலம் சிலக் காட்சிகளைப் படமாக்க வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விடுதலை 2 அறிவித்தபடி டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டப்பிங் கலைஞர் ரவீனாவுக்கு திருமணம்.. பிரபல இயக்குனரை மணக்கிறார்..!

விஜய்யை எதிர்க்க அஜித்துக்கு ஆதரவா? துணை முதல்வர் உதயநிதியின் வாழ்த்து செய்தி..!

மீண்டும் தொடங்குகிறதா மணிரத்னத்தின் ‘தக்லைஃப்’ படத்தின் ஷூட்டிங்?

ஆண்ட்ரியா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய ‘மனுஷி’ படத்துக்கு சென்சாரில் சிக்கல்?

கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments