Webdunia - Bharat's app for daily news and videos

Install App

G.O.A.T ஷூட்டிங்கின்போது, விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியீடு

Sinoj
சனி, 13 ஜனவரி 2024 (13:14 IST)
வெங்கட்பிரபுவின்   G.O.A.T படத்தின் ஷீட்டிங்கின்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களிலும், ஐதராபாத்தில் முக்கியமான காட்சிகளை படமாக்கப்பட்டது.

இதையடுத்து,  சென்னை கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இன்று  The Greatest Of All Time பட ஷூட்டிங்கின்போது  நடிகர் விஜய், ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் G.O.A.Tபட ஷூட்டிங்கின்போது, விஜய் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை G.O.A.T பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments