Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி ஷூட்டிங்கை பாதிக்கும் தட்பவெப்ப நிலை!

விடாமுயற்சி ஷூட்டிங்கை பாதிக்கும் தட்பவெப்ப நிலை!
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:53 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் அங்கு நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக இரவில் கடும்குளிர் காரணமாக பகலில் மட்டுமே ஷூட்டிங் நடத்த முடிவதாக சொல்லப்படுகிறது. அஜித்தும் தன்னுடைய காட்சிகளை பகலில் படமாக்க சொல்லி இயக்குனர் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை!