Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமுயற்சி படத்தின் பாடல்கள் கம்போஸிங்கை முடித்த அனிருத்!

விடாமுயற்சி படத்தின் பாடல்கள் கம்போஸிங்கை முடித்த அனிருத்!
, சனி, 23 டிசம்பர் 2023 (07:10 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்கு பிறகு விடாமுயற்சி படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜித்தோடு இணைந்துள்ளார் அனிருத். இந்த படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் கம்போஸ் செய்து முடித்துக் கொடுத்துவிட்டாராம் அனிருத். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது கேப்டன் மில்லர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்!