Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அஜித்? விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:24 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக அஜித் எந்த படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. கடைசியாக அசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கவேண்டும்- நீதிமன்றம் உத்தரவு!

பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments