Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம்யூட் செய்யப்பட்ட லியோ டிரைலரில் இடம்பெற்ற கெட்டவார்த்தை!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:16 IST)
கடந்த வாரம் வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நிலையில் இந்த டிரைலரில் விஜய் ஒரு இடத்தில் ஆவேசமாக ஒரு மோசமான கெட்டவார்த்தையை பேசும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் குழந்தைகளை ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய் தன் படத்தில் டிரைலரில் இப்படி பேசி இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்த வசனத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இப்போது யுட்யூபில் டிரைலரில் அந்த வார்த்தை ம்யூட் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திரையரங்கில் அந்த வார்த்தை இடம்பெறாது என இயக்குனர் லோகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments