Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூட்டிங்குக்கு தயாரான விடாமுயற்சி படக்குழு.. இந்த நாட்டில்தான் முதல்கட்ட ஷூட்டிங்!

ஷூட்டிங்குக்கு தயாரான விடாமுயற்சி படக்குழு.. இந்த நாட்டில்தான் முதல்கட்ட ஷூட்டிங்!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:36 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் தொடக்கத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டுக்கு ஷூட்டிங்குக்காக படக்குழுவினருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சென்னையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, 10 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அயலான் வழக்கமான திரைப்படம் இல்லை…” எதிர்பார்ப்பை ஏற்றும் ரகுல் ப்ரீத் சிங் !