Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

Siva
திங்கள், 3 பிப்ரவரி 2025 (18:00 IST)
அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்த காட்சிகள் இருப்பதை எடுத்து, இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கடுமையான பனி,  பொருட்களை எடுத்துக்கொண்டு மலையேறும் காட்சிகள், படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்பட்ட கார் விபத்து, கார் விபத்தால் அவருக்கு ஏற்பட்ட காயம், காயத்தோடு அவர் நடித்துக் கொடுத்த காட்சிகள் ஆகியவை இந்த 163 வினாடிகள் கொண்ட வீடியோவில் உள்ளன.
 
இதனை அடுத்து, இந்த படத்தை எடுப்பதற்காக படக்குழுவினர் சந்தித்த சவால்களை புரிந்து கொள்ள முடிகிறது என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் மட்டும் இந்த படம் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் முன்பதிவுகளும் தொடங்கி விட்டதை அடுத்து, ஒரு சில நிமிடங்களில் முதல் நாள் காட்சிக்கான முன்பதிவு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments