நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து கடந்த மாதம் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க வந்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் முதல் நாளுக்குப் பின்னர் படிப்படியாக வசூல் வீழ்ச்சியடைந்தது. இதனால் படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் தற்போது இந்த படம் பிரபல ஓடிடித் தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது. சில படங்கள் திரையரங்குகளில் ஏற்படுத்தாதத் தாக்கத்தை ஓடிடியில் ஏற்படுத்தும். அப்படி எதாவது அற்புதம் விடாமுயற்சி படத்துக்கு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.